செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

'திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்': தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையை மீளமைக்காமல், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தக்கூடாது என, தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் மீளவும் கடிதம் மூலம் வலியறுத்தியுள்ளார்.

ad

news-details

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையை மீளமைக்காமல், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தக்கூடாது என, தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் மீளவும் கடிதம் மூலம் வலியறுத்தியுள்ளார். கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் பா.சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோருக்கு இரா.சம்பந்தன் கையெழுத்திட்ட கடிதம் நேரிலும், வட்ஸ்அப் வழியாகவும் கிடைத்துள்ளதாகவும், பதிவுத்தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். அண்மையில், தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூடி, திட்டமிட்டபடி கட்சியின் தேசிய மாநாட்டை ஜனவரி 21ஆம் திகதி கூட்டுவதென தீர்மானித்திருந்தது. இந்த கூட்டத்துக்கும் இரா.சம்பந்தன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கு அறிவிக்காமல், அழைப்பு விடுக்காமல் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தை நடத்தியது முறையற்ற நடவடிக்கையென்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தெரிவு... தலைமை பதவியை எம்.ஏ.சுமந்திரன் குறிவைத்துள்ளதை இரா.சம்பந்தன் விரும்பாமை... திருகோணமலை மாவட்டத்தின் கட்டுப்பாட்டை கனடா இறக்குமதி குகதாசன் வசப்படுத்தியமை தொடர்பில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைகளை மாற்றியமைக்க இரா.சம்பந்தன் முயற்சிக்கிறார். விரிவான தகவல்களுக்கு| 'எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்': சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி! முன்னதாக, கடந்த உள்ளூராட்சிசபை வேட்பாளர் தெரிவின் போது, தனது கருத்தை கேட்காமல் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டது, தனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்பட்டது பற்றி இரா.சம்பந்தன் இந்த கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது, குகதாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள 40 முறை முயன்றதையும், தனது அழைப்பை குகதாசன் ஏற்காமல் விட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை குழப்பங்கள் தொடர்பில் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவை, கட்சியின் மத்தியகுழு நியமித்தது. கட்சியின் செயலாளர் பா.சத்தியலிங்கமும், எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவராக கருதப்படுவதால், அவர் விசாரணையை திட்டமிட்டு தாமதப்படுத்தியதாக விசாரணைக்குழுவில் உள்ளவர்களிடமே அப்பிராயம் உள்ளது. இதையடுத்து, கட்சியின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வட்டார, தொகுதிக்கிளைகள் தெரிவில் தனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு- இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியிருந்தார். திருகோணமலை மாவட்ட கிளையை முழுமையாக புனரமைக்காமல்- கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாமென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். எனினும், அண்மையில் திருகோணமலையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் பா.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மறுநாள் திருகோணமலையிலேயே கட்சியின் அரசியல்குழு கூடியது. திருகோணமலை குழப்பத்துக்கு தீர்வாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள இரா.சம்பந்தன் தரப்பை சேர்ந்த 6 பேரை பொதுக்குழுவில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்போது, கொழும்பு கிளையில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் புறமொதுக்கப்பட்டதாக தெரிவித்து, அங்கு 4 வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென அந்த அணியினர் கோரினர். அவர்கள் தரப்பில் 2 பேரை பொதுக்குழுவில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக நியமிக்க இணக்கம் காணப்பட்டது. இந்த இடைக்கால ஏற்பாட்டுக்கு இரா.சம்பந்தன் எதிர்ப்பு தெரிவித்தே, தற்போது கடிதம் அனுப்பியுள்ளார். திருகோணமலை குழப்பம் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவிக்கும் 3வது ஆட்சேபணையிது. தனது முன்னைய 2 ஆட்சேபணைகளையும் கட்சித் தலைமை முறையாக கண்டுகொள்ளவில்லையென்றும் இந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடா குகதாசன் தரப்பினர் திருகோணமலையை கைப்பற்றியது- பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தும், அங்கத்துவ பணத்தை தாமே செலுத்தி முறையற்ற விதமாக கட்சியில் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டதாகவும் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகியிருந்தன. அதே குற்றச்சாட்டை இந்த 3வது கடிதத்தில் இரா.சம்பந்தனும் நேரடியாக சுமத்தியுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் உயர்மட்ட ஆதாரமொன்று தமிழ்பக்கத்திடம் தெரிவித்தது. “திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இதனை வலியுறுத்தி தெரிவிக்கிறேன்“ என இரா.சம்பந்தன் குறிப்பிட்டு, கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையை முழுமையாக புனரமைக்காமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையை சேர்ந்த இரா.சம்பந்தனின் பிரதிநிதிகள்,  இரா.சம்பந்தனின் கடிதத்தை நேரடியாக எடுத்து வந்து கட்சியின் தலைவர், செயலாளர், நிர்வாக செயலாளரிடம் ஒப்படைத்ததாகவும், வட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு தபால் வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தந்துள்ளதாகவும், கடிதத்தை பெற்றுக்கொண்ட தரப்பொன்று தமிழ்பக்கத்திடம் தெரிவித்தது. திருகோணமலையில் அண்மையில் கட்சியின் அரசியல்குழு கூட்டம் முடிந்ததும், எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம்- “திட்டமிட்டபடி ஜனவரி 21 தேசிய மாநாட்டை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது“ என அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேசிய மாநாட்டை நடத்தக் கூடாதென இரா.சம்பந்தன் தற்போது கடிதம் அனுப்பியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் தலைமை  பதவிக்கு வருவதை தான் விரும்பவில்லையென்பதை இரா.சம்பந்தன் ஏற்கெனவே பல்வேறு தரப்பினரிடமும் வெளிப்படுத்தியிருந்ததை தமிழ்பக்கம் முன்னரும் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கட்சியின் தேசிய மாநாட்டையொட்டி இரா.சம்பந்தன்- எம்.ஏ.சுமந்திரன் பலப்பரீட்சை நடந்து வருகிறது.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments